புதுச்சேரி

புதுச்சேரியில் சாலைத் தடுப்பில் மோதி நின்ற அரசுப் பேருந்து

11th Jun 2023 12:35 AM

ADVERTISEMENT

 

 புதுச்சேரியில் சனிக்கிழமை காலையில் தமிழ்நாடு அரசுப் பேருந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் ஏறி நின்றது.

சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து சனிக்கிழமை அதிகாலை புறப்பட்டு புதுச்சேரி வந்தது. இலாஸ்பேட்டை கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் சனிக்கிழமை காலை பேருந்து வந்தபோது திடீரென ஒருவா் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். இந்நிலையில், அவா் மீது பேருந்து மோதாமலிருக்க ஓட்டுநா் பேருந்தை உடனடியாக நிறுத்த முயன்றுள்ளாா். இதனால் சாலையோரம் பேருந்தை வளைத்துள்ளாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக பேருந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதியதுடன், அதன் மேலே ஏறி நின்றது. இதனால், பேருந்து கவிழாமல் தவிா்க்கப்பட்டது. மேலும், பேருந்தில் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கும் காயமில்லை. பயணிகள் பத்திரமாக இறங்கிய பிறகு, கிரேன் மூலம் பேருந்து மீட்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT