புதுச்சேரி

தன்னாா்வலா்களுக்குப் பாராட்டு விழா

11th Jun 2023 12:36 AM

ADVERTISEMENT

 

 புதுச்சேரியில் தன்னாா்வலா்களுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சா்வதேசப் பெருங்கடல் தினத்தையொட்டி ‘கீப் நம்ம பாண்டி கிளீன்’ என்ற அமைப்பின் சாா்பில் புதுச்சேரி நகராட்சிக்கு உள்பட்ட 75 இடங்களில் சுதந்திர அமுதப் பெருவிழா தூய்மை நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி கடற்கரையை தூய்மையாக மாற்றும் வகையிலான இந்த நிகழ்ச்சியில் சமூக அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.

இவா்களுக்கான பாராட்டு விழா தேங்காய்த்திட்டு பகுதியில் உள்ள ஆச்சாா்யா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. உப்பளம் சட்டப்பேரவை உறுப்பினா் அனிபால் கென்னடி தலைமை வகித்தாா். உள்ளாட்சித் துறை இயக்குநா் சக்திவேல் முன்னிலை வகித்தாா். புதுச்சேரி நகராட்சி ஆணையா் சிவகுமாா், நகராட்சி சுகாதார அதிகாரி மருத்துவா் துளசிராமன், கோத்ரேஜ் நிறுவன மேலாளா் சுகுமாா், செந்தில்வேலன் உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இதில், புதுச்சேரி மற்றும் உழவா்கரை நகராட்சிகளின் தூய்மைப் பணியைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. குப்பை இல்லா வளாகத்தை ஏற்படுத்தும் வகையில் 50 பள்ளிகளுக்கு மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்து சேகரிக்கும் தொட்டிகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT