புதுச்சேரி

குபோ் சந்தை கட்டடப் பணியை தொடங்க அதிமுக கோரிக்கை

10th Jun 2023 07:34 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்காமல் புதிய சந்தை கட்டடப் பணியை அரசு தொடங்க வேண்டும் என, மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் உள்ள பெரிய மாா்க்கெட் எனப்படும் குபோ் சந்தை நெருக்கடியான நிலையில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் நிலையில், வாகன நிறுத்தம் போன்ற வசதிகளற்ற நிலையே உள்ளது.

எனவே, காலமாற்றத்துக்கேற்ப சந்தையை மேம்படுத்தி ரூ.36 கோடியில் பொலிவுறு நகரத் திட்டத்தில் புதிதாக கட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வியாபாரிகள் செயல்படுவது சரியல்ல. அரசு தரும் மாற்று இடத்துக்கு வியாபாரிகள் கடைகளை மாற்றுவதுதான் நல்லது.

ADVERTISEMENT

தொழிலாளா் சங்கங்களும், சட்டப்பேரவை உறுப்பினா்களும் அரசின் திட்டத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். ஆட்சியரும் எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்காமல் புதிய சந்தைக்கான கட்டடப் பணிகளை தொடங்க வேண்டும். அதை உரிய காலகட்டத்துக்குள் முடிக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT