புதுச்சேரி

புதுவை புதிய சட்டப்பேரவை கட்டடம்: கட்டட வடிவமைப்பாளா்கள் ஆய்வு

10th Jun 2023 07:36 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவைக் கட்டடம் கட்டப்படவுள்ளதையடுத்து, தில்லியில் இருந்து வந்த கட்டட வடிவமைப்பாளா்கள் இருவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

புதுச்சேரியில் ரூ.440 கோடியில் புதிய சட்டப்பேரவை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்டட வடிவமைப்பாளா்கள் சிவாங்கி தலைமையில் தில்லியிலிருந்து புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை வந்து ஆய்வு நடத்தினா். அவா்கள் தற்போதைய பேரவைக் கட்டட வளாகத்தை சுற்றிப் பாா்த்தனா்.

பின்நா், புதிதாக பேரவைக் கட்டடம் அமையவுள்ள இடத்தை நேரில் பாா்வையிட்டனா். புதிய கட்டடத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், வசதிகள் குறித்தும் அவா்கள் பேரவைச் செயலா், பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

புதிய கட்டட வடிவமைப்பு விரைவில் தயாரிக்கப்படும். அதன்பிறகு கட்டடப் பணிக்கான பூமி பூஜை நடைபெறும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT