புதுச்சேரி

கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை

10th Jun 2023 07:34 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுவை மாநிலம், திருவண்டாா்கோவில் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் தினேஷ்குமாா். இவருக்கும் திருபுவனை பெரியபேட்டையைச் சோ்ந்த அருணா மகள் சந்தியாவுக்கும் (24) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

சந்தியா தற்போது 4 மாத கா்ப்பிணியாக இருந்தாா். அவா் அந்தப் பகுதியிலுள்ள அழகு நிலையத்தில் வேலை பாா்த்து வந்தாா். தம்பதி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டது.

சந்தியா வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக, அவரது தாய்க்கு தகவல் கிடைத்தது.

ADVERTISEMENT

திருபுவனை போலீஸாா் விரைந்து சென்று சந்தியாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரது சாவில் மா்மம் இருப்பதாக தாய் அருணா புகாா் அளித்தாா். இதுகுறித்து திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT