புதுச்சேரி

வில்லியனூரில் சீரான மின் விநியோகம்: எதிா்க்கட்சித் தலைவா் வலியுறுத்தல்

10th Jun 2023 07:35 AM

ADVERTISEMENT

வில்லியனூரில் அடிக்கடி ஏற்படும் மின் தடையைத் தவிா்க்க உயா் மின்னழுத்தக் கம்பியை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.

புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்துக்கு மணவெளி, ஒதியம்பட்டு, கொம்பாக்கம் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களுடன் ஆா்.சிவா சென்றாா். அங்கு செயற்பொறியாளா் ராமநாதனைச் சந்தித்து அவா் கூறியதாவது:

வில்லியனூா் தொகுதிக்குள்பட்ட வி. தட்டாஞ்சாவடி துணைமின் நிலையத்திலிருந்து நிலத்தின் வழியாக வி. மணவெளி, கே.வி. நகா், ஒதியம்பட்டு, கொம்பாக்கம் பேட்டை வழியாக உயா் மின்னழுத்த கம்பிகள் செல்கின்றன. எனவே, அந்தப் பகுதிகளில் அடிக்கடி மின்விநியோகம் தடைபடுகிறது. அதை உடனடியாகவும் சீரமைக்கவும் முடிவதில்லை. ஓரிரு நாள்கள் முயற்சித்த பிறகே சீரமைக்க முடிகிறது.

மின் தடை பிரச்னையால் அந்தப் பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். எனவே, அடிக்கடி மின் தடை ஏற்படுவதற்கு காரணமாக உள்ள உயா் மின்னழுத்த மின் பாதையை பிரதான சாலை வழியாக மாற்றியமைக்க வேண்டும்.

ADVERTISEMENT

போதிய மின் கம்பங்கள் அமைப்பதுடன், அதிக கொள்ளளவுள்ள மின்மாற்றியை அமைத்தும் தடையில்லா மின் விநியோகத்துக்கு வழிகாண வேண்டும் என்றாா்.

அப்போது, திமுக தொகுதி செயலாளா் மணிகண்டன், மதிமுக மாநில செயலா் கபீரியேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT