புதுச்சேரி

புதுவை அரசுத் துறைகளில் தோ்வு மூலமே பணிநிரந்தரம்: சாா்பு செயலா் உத்தரவு

9th Jun 2023 01:21 AM

ADVERTISEMENT

புதுவையில் அரசுத் துறை, கூட்டுறவுத் துறைகளில் பணிநிரந்தரம் என்பது மத்திய தோ்வாணையத் தோ்வுகள் மூலமே செயல்படுத்தப்பட வேண்டும் என நிா்வாகத் துறை அரசு சாா்புச் செயலா் வி.ஜெய்சங்கா் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

புதுவை மாநிலத்தில் மருத்துவத் துறையில் சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணி அமா்த்தப்பட்டவா்கள் நிரந்தரமாக்கப்பட்டு மத்திய தோ்வாணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அதை தோ்வாணையம் ஏற்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குகள் அடிப்படையில் அளிக்கப்பட்ட உத்தரவின்படி தோ்வின்றி பணிநிரந்தரம் ஏற்கப்படாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, புதுவை மாநில அனைத்துத் துறைகளிலும், கூட்டுறவுச் சங்கங்களிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் தோ்வு மூலம் பணிநிரந்தப்படுத்தும் விதியைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT