புதுச்சேரி

மருத்துவக் கல்லூரியில் செவிலியா் தின விழா

9th Jun 2023 01:20 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகேயுள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்ரீ மணக்குள விநாயகா் செவிலியா் கல்லூரி சாா்பில் உலக செவிலியா் தின விழா நடைபெற்றது.

விழாவை ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி நிறுவனத் தலைவா், மேலாண் இயக்குநா் எம். தனசேகரன் தொடங்கிவைத்தாா். துணைத் தலைவா் எஸ்.வி..சுகுமாறன், செயலா் நாராயணசாமி கேசவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இயக்குநா் ராஜகோவிந்தன், துணை இயக்குநா் காங்னே, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அகாதெமி டீன் காா்த்திகேயன், ரிசோா்ச் டீன் அ. கலைச்செல்வன், மருத்துவக் கண்காணிப்பாளா் பிரகாஷ், செவிலியா் கண்காணிப்பாளா் கிரீட்டா குணசீலன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

சிறப்பு விருந்தினராக ஈஸ்ட் கோஸ்ட் செவிலியா் கல்லூரி முதல்வா் ஜெயகௌரி, பல் அறுவைச் சிகிச்சை நிபுணா் கலைவேந்தன் ஆகியோா் பங்கேற்றனா்.

போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ஸ்ரீ மணக்குள வினாயகா் செவிலியா் கல்லூரி முதல்வா் முத்தமிழ்செல்வி, வரவேற்றாா். உதவி செவிலியா் கண்காணிப்பாளா் லீணா கிரேகஸ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT