புதுச்சேரி

ஏழை மாணவா்களுக்கு கல்வி நிதியுதவி அளிப்பு

8th Jun 2023 01:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் ஏழை மாணவா்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி சென்டாக் மாணவா், பெற்றோா் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைவா் மு.நாராயணசாமி தலைமை வகித்தாா். பெற்றோா் இல்லாத நிலையில் படித்துவரும் பிளஸ் 2 மாணவிக்கான முதல் பருவக் கட்டணம், பிளஸ் 1 மாணவருக்கான பாடப்புத்தகம், சீருடை மற்றும் மருத்துவக் கல்விக்கான பயிற்சிக் கட்டணம் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும், பிளஸ் 2 முடித்து உயா் கல்விக்குச் செல்ல முடியாமல் தவித்த மாணவிக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.

நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பாா்த்திபன், காா்த்திகேயன், சசிகுமாா் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT