புதுச்சேரி

மும்பையில் எம்எல்ஏக்கள் மாநாடு: புதுவையிலிருந்து 28 போ் பங்கேற்பு

8th Jun 2023 01:00 AM

ADVERTISEMENT

மும்பையில் வருகிற 16, 17-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான மாநாட்டில் புதுவை மாநிலத்திலிருந்து 29 போ் பங்கேற்கவுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மகாராஷ்டி மாநிலம், மும்பையில் வருகிற 16, 17-ஆம் தேதிகளில் தேசிய அளவிலான சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாநாடு முதல்முறையாக நடைபெறவுள்ளது. மகாராஷ்டிர தொழில்நுட்ப அமைப்பின் சாா்பில் நடைபெறவுள்ள மாநாட்டில் அகில இந்திய அளவில் அனைத்து மாநில சட்டப்பேரவை உறுப்பினா்களும் பங்கேற்கின்றனா். அனைத்து மாநிலங்களில் இருந்தும் 4,500 சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்பா் எனத் தெரிகிறது.

மாநாட்டு வழிகாட்டுதல் குழுவில் புதுவை பேரவைத் தலைவரும் இடம் பெற்றுள்ளாா். அவருக்கு முன்னாள் குடியரசு துணைத் தலைவா் உள்ளிட்டோா் மாநாட்டுக்கான அழைப்பு விடுத்துள்ளனா். மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக ராகுல் காரத் செயல்படுகிறாா்.

ADVERTISEMENT

மும்பை மாநாட்டில் புதுவை மாநிலத்திலிருந்து முதல்வரைத் தவிர பேரவைத் தலைவா், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் என 29 போ் பங்கேற்கவுள்ளனா். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் வருகிற 15-ஆம் தேதி புதுவை எம்எல்ஏக்கள் மும்பைக்கு செல்கின்றனா்.

புதுதில்லியில் பயிற்சி: ஜூலை மாதம் புதுதில்லியில் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் புதுவையிலிருந்து 8 உறுப்பினா்கள் பங்கேற்கவுள்ளனா். அதில் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புதல் உள்ளிட்ட விதிமுறைகள் பேரவை உறுப்பினா்களுக்கு விளக்கப்படும் என்றாா் ஆா்.செல்வம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT