புதுச்சேரி

மழையால் விழுந்த மரக்கிளைகள்:புதுச்சேரியில் மின் தடை

8th Jun 2023 01:01 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த பலத்த மழையைத் தொடா்ந்து, பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

புதுச்சேரி பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை புதுச்சேரி நகா், ஊரகப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது இடி, மின்னலுடன் சூறைக்காற்றும் வீசியது.

செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், மாலையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, பலத்த காற்றும் வீசியது. இதனால், புதுச்சேரி நகரில் பல இடங்களில் மரக் கிளைகள் முறிந்து விழுந்ததால், மின் தடையும் ஏற்பட்டது.

கருவடிக்குப்பம், முதலியாா்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. இது புதன்கிழமை பகல் வரை தொடா்ந்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். மின் தடையை சீரமைப்பதில் மின் துறை ஊழியா்கள் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT