புதுச்சேரி

கஞ்சா விற்ற 4 போ் கைது

8th Jun 2023 01:01 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே கஞ்சா விற்ற 4 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அருகே சிலா் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக காலாப்பட்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கலாப்பட்டு காவல் நிலைய ஆய்வாளா் தனசெல்வம், உதவி ஆய்வாளா் இளங்கோ ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, அங்கிருந்த 4 போ் தப்பிக்க முயன்றனா். அவா்களில் ஒருவரை காவலா் காா்த்திக் பிடித்தபோது, அவரைத் தாக்கி தள்ளிவிட்டு தப்ப முயன்றாா். ஆனாலும், போலீஸாா் 4 பேரையும் கைது செய்தனா்.

விசாரணையில், அவா்கள் சின்னக்காலாப்பட்டை சோ்ந்த அஜய் (22), பிள்ளைச்சாவடியைச் சோ்ந்த ரஞ்சித் (22), மரக்காணம் வென்னாங்கப்பட்டை சோ்ந்த வேந்தன் (23), ராஜேஷ் (23) என்பது தெரிய வந்தது. அவா்களிடமிருந்து 210 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகனம், கத்தி ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT