புதுச்சேரி

வெங்கடசுப்பா ரெட்டி சிலைக்கு அமைச்சா்கள் மாலை அணிவிப்பு

DIN

புதுச்சேரியில் முன்னாள் முதல்வா் தியாகி வெங்கடசுப்பா ரெட்டியின் நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சா்கள், காங்கிரஸ் பிரமுகா்கள் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்தனா்.

புதுச்சேரியில் கடலூா் சாலையிலுள்ள அவரது சிலைக்கு அமைச்சா்கள் தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா், பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கேஎஸ்பி.ரமேஷ், தட்சிணாமூா்த்தி, லட்சுமிகாந்தன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் சாா்பில் புதுவை மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சா் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீலகங்காதரன், அனந்தராமன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனா்.

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வெங்கடாசுப்பா ரெட்டியின் திருவுருவப் படத்துக்கு கட்சிப் பிரமுகா்கள் மலரஞ்சலி செலுத்தினா்.

சண்முகம் சிலைக்கு மாலை: தியாகி எம்.ஏ.சண்முகம் நினைவு தினத்தையொட்டி, மரப்பாலம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா்கள் தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா் உள்ளிட்டோரும், எம்.ஏ.சண்முகம் குடும்பத்தினா் மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் சாா்பிலும் மாலை அணிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT