புதுச்சேரி

இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

DIN

புதுச்சேரியில் கோயில் நிலத்தை அபகரித்தது தொடா்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, இந்து முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் சிலா் அபகரித்து வீட்டுமனைகளாக்கியதாக புகாா் எழுந்தது. நில அபகரிப்பு சம்பந்தமாக கோயில் நிா்வாகக் குழுவினா் அளித்த புகாரின் பேரில், சிபிசிஐடி பிரிவினா் வழக்குப் பதிந்து 12 போ் வரை கைது செய்தனா்.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, புதுவை மாநில இந்து முன்னணி சாா்பில் சுதேசி பஞ்சாலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில பாரத விஸ்வகா்ம மகா சபை தலைவா் பி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இந்து முன்னணி அமைப்பின் பொருளாளா் ஜி.செந்தில்முருகன், துணைத் தலைவா்கள் எஸ்.நாகராஜன், ஏ.மணி வீரப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதுவை மாநில இந்து முன்னணி தலைவா் அ.ா.சனில்குமாா் பேசினாா்.

இந்து முன்னணி புதுச்சேரி கோட்டச் செயலா் த.முருகையன் வரவேற்றாா். சே.கோகுல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT