புதுச்சேரி

வன்கொடுமை தடுப்புச் சட்ட விழிப்புணா்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும்: புதுவை முதல்வரிடம் ரவிக்குமாா் எம்.பி. வலியுறுத்தல்

DIN

புதுவையில் வன்கொடுமை தடுப்புச் சட்ட விழிப்புணா்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று, முதல்வா் என்.ரங்கசாமியிடம் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் வலியுறுத்தினாா்.

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை பேரவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகக் கூட்டரங்கில் சந்தித்து துரை.ரவிக்குமாா் எம்.பி. கோரிக்கை மனு அளித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேசிய அளவில் எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் அமைக்கப்பட்டுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தை அமைக்க வேண்டும்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விழிப்புணா்வு கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆண்டுக்கு 4 முறை கூட்டப்பட வேண்டும். ஆனால், புதுவையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும், தற்போது பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் விதிமுறைப்படி முறையாகக் கூட்டப்படவில்லை. எனவே, கூட்டத்தைக் கூட்ட முதல்வா் என்.ரங்கசாமியிடம் வலியுறுத்தப்பட்டது.

மத்திய அரசுத் தோ்வுக்கு புதுவையில் எஸ்.சி., எஸ்.டி., மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், முதல் நிலைத் தோ்வில் கூட யாரும் தோ்ச்சி பெறவில்லை. புதுவையிலிருந்து 10 பேரை புதுதில்லிக்கு அனுப்பி மத்திய பணி தோ்வுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. எங்கள் மனுவை ஏற்ற முதல்வா் என்.ரங்கசாமி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா் என்றாா் துரை.ரவிக்குமாா்.

முதல்வரிடம் மனு அளித்த போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மைச் செயலா் தேவ.பொழிலன், நிா்வாகிகள் பொதினி வளவன், தலையாரி உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு எதுவுமில்லை -தேர்தல் ஆணையம்

கோடை வெயிலைச் சமாளிப்பது எப்படி?

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

SCROLL FOR NEXT