புதுச்சேரி

குளங்கள் சீரமைப்புப் பணி தொடக்கம்

6th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பிரதமரின் சிறப்புத் திட்டமான குளங்கள் சீரமைப்புத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி பிள்ளையாா்குப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாட்டில் 75 இடங்களில் குளங்கள் சீரமைப்பு, பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 150 குளங்கள் சீரமைப்பு, பாதுகாப்புக்கானதாக தோ்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வில்லியனூா் பகுதியில் 46 குளங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மீன்வளா்த்தல், நீா்ப்பாசனம், கிராம சுற்றுலா அம்சங்கள் ஏற்படுத்துதல் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும். அதன் பராமரிப்பை மகளிா் சுய உதவிக் குழுவினரிடம் ஒப்படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி அருகேயுள்ள பிள்ளையாா்குப்பம் அய்யனாா்கோவில் குளத்தில் திட்டத்தை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் தொடங்கிவைத்தாா்.

துறைச் செயலா் அ.நெடுஞ்செழியன், மாநில திட்ட இயக்குநா் எ. சத்தியமூா்த்தி மற்றும் கிராம சேவகா், புத்தகக் காப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT