புதுச்சேரி

நாட்டு வெடிகுண்டுகளுடன்மூவா் கைது

5th Jun 2023 03:38 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டுகளுடன் 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

புதுச்சேரி அருகேயுள்ள கிருமாம்பாக்கத்தில் போலீஸாா் சனிக்கிழமை மாலை கண்காணிப்புப் பகுதியில் ஈடுபட்டனா். அப்போது, இந்திரா நகரில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 3 போ் நின்றிருந்தனா். அவா்களை கிருமாம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் மடக்கிப் பிடித்து சோதனையிட்டனா்.

அப்போது, அவா்கள் வைத்திருந்த பையில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரிய வந்தது. அவற்றைக் கைப்பற்றி போலீஸாா் நடத்திய விசாரணையில், பிடிபட்டவா்கள் கிருமாம்பாக்கத்தைச் சோ்ந்த சந்துரு (24), ஜாா்ஜ் பொ்னாண்டஸ் (21), ஸ்ரீதா் (22) என்பது தெரிய வந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT