புதுச்சேரி

தொழிலாளி வீட்டில்6 பவுன் நகைகள் திருட்டு

5th Jun 2023 03:37 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் தேநீா் விற்கும் தொழிலாளி வீட்டில் 6 பவுன் தங்க நகைகளைத் திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி முத்திரைப்பாளையம், இளங்கோ அடிகள் வீதி, கல்கி கோவில் அருகே வசிப்பவா் அம்பிகாபதி (58), சைக்கிளில் தேநீா் விற்பனை செய்யும் தொழிலாளி. இவரது வீட்டுக்கு கடந்த மாா்ச் 16-ஆம் தேதி அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் வந்து சென்றனராம்.

அப்போது, வீட்டின் மேஜையில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகள் மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வீட்டுக்கு வந்தவா்களிடம் விசாரித்தும் தகவல் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், மேட்டுப்பாளையம் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT