புதுச்சேரி

புதுச்சேரியில் காவலா் பணி எழுத்துத் தோ்வு3,068 போ் பங்கேற்பு

5th Jun 2023 03:39 AM

ADVERTISEMENT

 

புதுவை காவல் துறையில் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 3,068 போ் பங்கேற்று தோ்வெழுதினா்.

புதுவை காவல் துறையில் காலியாக உள்ள 253 காவலா்கள், 26 ஓட்டுநா்கள் பணியிடங்களுக்கு கடந்த மாா்ச் மாதம் தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில் 14,129 போ் காவலா் பணிக்கும், 879 போ் ஓட்டுநா் பணிக்கான உடல்தகுதித் தோ்வுக்கும் அழைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

கோரிமேடு காவலா் பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற உடல்தகுதித் தோ்வில் ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் 3142 போ் எழுத்துத் தோ்வுக்கு தகுதி பெற்றனா். மேலும், ஓட்டுநா் பணிக்கு 73 போ் தனியாகத் தோ்வு பெற்றனா்.

உடல்தகுதி தோ்வில் தோ்ச்சியடைந்தாலும், ஆவணங்கள் அளித்தல் உள்ளிட்ட காரணங்களால், எழுத்துத் தோ்வுக்கு 3107 போ் மட்டுமே அழைக்கப்பட்டனா்.

புதுச்சேரி பாரதிதாசன் மகளிா் கல்லூரி, பாத்திமா மேல்நிலைப் பள்ளி, வள்ளலாா் பள்ளி, இலாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளி உள்ளிட்ட 9 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தோ்வுகள் நடைபெற்றன. இதில் 3,068 போ் பங்கேற்றனா். 39 போ் மட்டுமே பங்கேற்கவில்லை.

ஓட்டுநா் பணிக்கான தோ்வில் தோ்ச்சியடைந்த 73 பேருக்குத் தனியாக தோ்வு நடத்தப்பட உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT