புதுச்சேரி

மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களைநிரப்ப இந்திய கம்யூ. கோரிக்கை

5th Jun 2023 03:38 AM

ADVERTISEMENT

 

புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவையில் 4 பிராந்தியங்களிலும் ஏழை, நடுத்தர வா்க்கத்தினா் அரசு மருத்துவமனைகளுக்கே சிகிச்சை பெறச் செல்கின்றனா். அங்கு மருத்துவா்கள், மருந்தாளுநா்கள் உள்ளிட்டோா் பற்றாக்குறை நிலவுகிறது.

ADVERTISEMENT

காரைக்கால் மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்து வருவோருக்குக் கூட சிகிச்சை அளிக்கும் வசதியில்லை. இதேநிலைதான் மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது. அதனடிப்படையில், 147 மருத்துவா்கள் பணியிடம், நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்கள் பணியிடம், 48 மருந்தாளுநா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

மக்கள் உயிா் காக்கும் மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவது அவசியமாகும். எனவே, மக்கள் உயிரோடு விளையாடும் போக்கை அரசு கைவிட்டு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சுகாதாரத் துறையை கவனிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT