புதுச்சேரி

புதுச்சேரி அரசு மருத்துவமனையில்நவீன முறையில் நோயாளிகள் விவரம் பதிவு

4th Jun 2023 02:16 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் விவரங்கள் நவீன முறையில் கணினி வழியில் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு தினமும் சுமாா் 2 ஆயிரம் போ் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். அவா்களுக்கு இதுவரை புறநோயாளிகளுக்கான சிகிச்சை ஆவணங்கள் தாள்கள் அடிப்படையில் அளிக்கப்பட்டன. இதனால், மருத்துவமனை சிகிச்சை ஆவணத்தை நோயாளிகள் எடுத்துவரும் கட்டாயம் ஏற்பட்டது. மேலும், ரத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு மீண்டும் அளிக்கும் நிலையும் உள்ளது.

நோயாளிகளின் சிகிச்சை ஆவணங்களை எண்ம முறையில் பதிவேற்றும் வகையில் கணினிப் பதிவு முறை அரசு மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு இதுவரை 500 பேரின் விவரங்கள் பதிவேற்றப்பட்டு பதிவெண் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ஆதாா், கைப்பேசி எண் அடிப்படையில் வழங்கப்படும் இந்த பதிவெண்ணைக் கொண்டு, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோயாளிகளின் சிகிச்சை ஆவணங்களை மருத்துவா்கள் கணினியில் பாா்க்க முடியும். அதனடிப்படையில், எளிதாக சிகிச்சையும் அளிக்கலாம் என மருத்துவா் சிவபெருமான் தெரிவித்தாா்.

இந்த கணினி பதிவு முறை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT