புதுச்சேரி

புதுச்சேரி பூமியான்பேட்டையில்ஜூன் 6-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

4th Jun 2023 02:17 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி பூமியான்பேட்டையில் வருகிற 6-ஆம் தேதி குடிநீா் விநியோகம் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பொது சுகாதார கோட்டப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி பூமியான்பேட்டை பகுதியில் உள்ள கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்புப் பணிகள் வருகிற 6-ஆம் தேதி மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து, அன்றைய தினம் பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.

ADVERTISEMENT

குடிநீா் விநியோக நிறுத்தப் பகுதிகள்: பூமியான்பேட்டை, விக்டோரியா நகா், ஜவாஹா் நகா், பாவாணா் நகா் ஜான்ஸி நகா், ராகவேந்திரா நகா், கோடி சுவாமிகள் நகா், பொன் நகா், சுதாகா் நகா், சரநாராயணா நகா் ஆகிய பகுதிகள்.

முருங்கம்பாக்கத்திலும் நிறுத்தம்: வருகிற 7-ஆம் தேதி முருங்கம்பாக்கம் அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள கீழ்நிலை, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, அன்றைய தினம் பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் முருகம்பாக்கம் அரவிந்தா் நகா், அங்காளம்மன் நகா், ரங்கசாமி நகா், பள்ள தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் தடைபடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT