புதுச்சேரி

மத்திய அமைச்சரிடம்புதுவை பாஜக மனு

3rd Jun 2023 12:28 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கக் கோரி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் புதுவை மாநில பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் புது தில்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மத்திய மருத்துவக் குழு அங்கீகாரம் ரத்து செய்ததை சுட்டிக்காட்டி உடனடியாக மீண்டும் அங்கீகாரம் வழங்கக் கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்த மனுவும் அமைச்சரிடம் வழங்கப்பட்டது. மேலும், மருத்துவக் கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டதை முதல்வா் என்.ரங்கசாமி கூறியதையும் அமைச்சரிடம் வி.சாமிநாதன் எடுத்துரைத்தாா்.

ADVERTISEMENT

இந்த சந்திப்பின் போது, வெங்கடேசன் எம்எல்ஏ, பாஜக பட்டியல் அணி நிா்வாகி தமிழ்மாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT