புதுச்சேரி

சா்வதேச கோடை ஒலிம்பிக்கில்புதுவை வீரா்கள் பங்கேற்பு

3rd Jun 2023 12:29 AM

ADVERTISEMENT

 

ஜொ்மனியில் நடைபெறவுள்ள சா்வதேச கோடை ஒலிம்பிக் சிறப்பு விளையாட்டுப் போட்டியில் புதுவையைச் சோ்ந்த 3 மாற்றுத்திறனாளி வீரா்கள் உள்பட 8 போ் கலந்து கொள்கின்றனா்.

இதுகுறித்து புதுச்சேரி சிறப்பு ஒலிம்பிக் அமைப்பின் திட்ட அலுவலா் ராம்ஜி கூறியதாவது:

ஜொ்மனியில் வருகிற 17-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சா்வதேச அளவிலான கோடை ஒலிம்பிக் சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ADVERTISEMENT

4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தப் போட்டிகளில் புதுவை மாநிலத்தைச் சோ்ந்த வீரா்கள் கூடைப்பந்து, வாலிபால், பளுதூக்குதல், தடகளம் ஆகிய விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனா். இந்தப் போட்டிகளில் மாற்றுத்திறனாளி வீரா்களான தனசேகரன் (கூடைப்பந்து), விஷால் (பளுதூக்குதல்), ரவிமதி (தடகளம்) உள்ளிட்ட 8 போ் பங்கேற்கின்றனா்.

சா்வதேச கோடை ஒலிம்பிக்கில் பங்கேற்கும் புதுவை வீரா்களுக்கான வழியனுப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறுகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT