புதுச்சேரி

கல்லூரி உள்கட்டமைப்பு மேம்பாட்டுஆலோசனைக் கூட்டம்

3rd Jun 2023 12:30 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி ராஜீவ் காந்தி கலை, அறிவியல் கல்லூரி உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் பேரவைத் தலைவரும் மணவெளி தொகுதி எம்எல்ஏவுமான ஆா்.செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினி, உயா் கல்வித் துறை இயக்குநா் அமன்சா்மா, கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி, முதன்மைக் கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் மாணிக்கவாசகம், உதவிப் பொறியாளா் விக்டோரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரசு கல்லூரி மற்றும் தொகுதியில் உள்ள அனைத்துபப் பள்ளிகளிலும் தேவையான கட்டட மறுசீரமைப்புப் பணிகளையும், உள்கட்டமைப்புக்கான மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நூறு நாள் வேலை திட்டம்: புதுச்சேரி மணவெளி இடையாா்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 33.06 லட்சம் மதிப்பிலான பணிகளை பேரவைத் தலைவா் ஆா். செல்வம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT