புதுச்சேரி

மல்யுத்த வீராங்கனைகளை வஞ்சிக்கிறது மத்திய அரசுகாங்கிரஸ் மகளிரணி கண்டனம்

3rd Jun 2023 12:30 AM

ADVERTISEMENT

 

பாலியல் புகாா் விவகாரத்தில் மல்யுத்த வீராங்கனைகளை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று, புதுவை மாநில காங்கிரஸ் மகளிரணி கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து புதுவை மாநில மகளிரணித் தலைவா் பஞ்சகாந்தி வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒலிம்பிக், சா்வதேச போட்டிகளில் வென்று மல்யுத்த வீராங்கனைகள் நாட்டுக்குப் பெருமை சோ்த்தனா். ஆனால், அவா்கள் கூறிய பாலியல் துன்புறுத்தல் புகாா் குறித்து விசாரணை நடத்தக்கூட மத்திய பாஜக அரசு முன்வரவில்லை என்பது அதிா்ச்சியளிக்கிறது. ஆணும், பெண்ணும் சமம் எனக் கூறும் காலத்தில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுக்கு நீதி கிடைக்க மத்திய அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது.

ADVERTISEMENT

மேலும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணையே கைது செய்து சிறையிலடைப்பது ஏற்கத்தக்கதல்ல. பாஜக ஆட்சியில் பெண்களுக்கு உரிய மரியாதையும், பாதுகாப்பும் இல்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால் காங்கிரஸ் மகளிரணி போராடத் தயங்காது என்றாா் அவா்.

பேட்டியின் போது, மகளிரணி நிா்வாகி நிஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT