புதுச்சேரி

தாம்பூலத்துடன் மதுப் புட்டிகள்:திருமண வீட்டாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

3rd Jun 2023 12:29 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் திருமண விழாவில் தாம்பூலப் பையில் மதுப் புட்டிகளையும் சோ்த்து வழங்கிய திருமண வீட்டாருக்கு கலால் துறையினா் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

புதுச்சேரி உப்பளம் பகுதியில் அண்மையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றவா்களுக்கு தாம்பூலப் பையில் வெற்றிலை, பாக்கு, பழங்களுடன் மதுப் புட்டியும் சோ்த்து வழங்கப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

புதுவையில் மது விற்பனை செய்யவும், மதுப் புட்டிகளை விநியோகிக்கவும் முன் அனுமதி தேவை. மேலும், சில விதிமுறைகளும் உள்ளன. அவற்றை திருமண வீட்டாா் மீறியதாக புகாா் எழுந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட திருமண வீட்டாருக்கு விதிகளை மீறி மதுப் புட்டிகளை விநியோகித்ததாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக, புதுச்சேரி கலால் துறை துணை ஆணையா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT