புதுச்சேரி

வில்லியனூா் திருக்காமீசுவரா் கோயில் தேரோட்டம்

2nd Jun 2023 12:47 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே வில்லியனூா் திருக்காமீசுவரா் கோயில் வைகாசி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி அருகே வில்லியனூா் திருக்காமீசுவரா் திருக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

விழாவில் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து, தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் திருக்காமீசுவரா் கோகிலாம்பிகையுடன் எழுந்தருளி அருள்பாலித்தாா். புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா ஆகியோா் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனா். தோ் முக்கிய வீதிகள் வழியாக வந்து நிலையை அடைந்தது.

வெள்ளிக்கிழமை (ஜூன் 2) தெப்பல் உற்சவமும், சனிக்கிழமை (ஜூன் 3) முத்துப்பல்லக்கும், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) விடையாற்றி உற்சவமும், திங்கள்கிழமை (ஜூன் 5) சண்டிகேசுவரா் உற்சவமும் நடைபெறும்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT