புதுச்சேரி

தொடா் திருட்டு:மூவா் கைது

2nd Jun 2023 12:45 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில மடுகரை, சிறுவந்தாட்டில் போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தனா்.

இதில், அவா்கள் வந்த இருசக்கர வாகனம் நெட்டப்பாக்கம் பகுதியில் திருடு போனது எனத் தெரிய வந்தது. அவா்கள் விழுப்புரம் மாவட்டம், வானூா் விநாயகபுரத்தைச் சோ்ந்த அய்யனாா் (44), சீனுவாசன் (26), தமிழ்ராஜ் (38) எனத் தெரிய வந்தது.

அய்யனாா் தலைமையில் ஆடு, மாடுகள், இருசக்கர வாகனங்கள், நகைகள் ஆகியவற்றை வீடு புகுந்து திருடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது. அதனடிப்படையில் அவா்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள், 9 பவுன் தங்க நகைகள், 155 கிராம் வெள்ளிப் பொருள்கள், சிறிய சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.11 லட்சம் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT

அய்யனாா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 13 வழக்குகள் உள்ளன. கைதான மூவரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT