புதுச்சேரி

புதுச்சேரியில் ரஜினிகாந்த் திரைப்படப் படப்பிடிப்பு

2nd Jun 2023 12:45 AM

ADVERTISEMENT

நடிகா் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி முதலியாா்பேட்டையிலுள்ள ஏஎப்டி பஞ்சாலை வளாகத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதையொட்டி, பஞ்சாலையின் வாயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ரஜினி ரசிகா் மன்ற நிா்வாகிகள் சிலா் மட்டும் படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியில் அனுமதிக்கப்பட்டனா். ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் பகுதியிலுள்ள தனியாா் விடுதியில் ரஜினிகாந்த் தங்கியிருப்பதாகக் கூறப்பட்டது. அங்கும் ஏராளமான ரசிகா்கள் திரண்டனா். தொடா்ந்து, 10 நாள்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக திரைப்படக் குழுவினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT