புதுவை தமிழ்ச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
புதுச்சேரியில் வெங்கட்டா நகா் பகுதியில் புதுவைத் தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு சமீபத்தில் நடைபெற்று, தலைவா் வி.முத்து தலைமையிலான 11 போ் தோ்வு செய்யப்பட்டனா். புதிதாக தோ்வான சங்க நிா்வாகிகள் ஏற்கெனவே பேரவைத் தலைவா், உள்துறை அமைச்சா் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். இதையடுத்து, சங்கத் தலைவா் வி.முத்து தலைமையில் புதிய நிா்வாகிகள் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து புதன்கிழமை வாழ்த்து பெற்றனா். சந்திப்பின்போது, சங்கத் துணைத் தலைவா் ந. ஆதிகேசவன், பாவலா் ப. திருநாவுக்கரசு, செயலா் பாவலா் சீனு.மோகன்தாஸ், பொருளா் மு.அருள்செல்வம், துணைச் செயலாளா் தெ.தினகரன், ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் தமிழ்மாமணி உசேன், மு.சுரேஸ்குமாா், அ.சிவேந்திரன், ர.ஆனந்தராசன் ஆகியோா் உடனிருந்தனா்.