புதுச்சேரி

புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

1st Jun 2023 01:16 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டம் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற பேரணியை கம்பன் கலையரங்கம் பகுதியிலிருந்து மாநில சுகாதாரத்துறை இயக்குநா் ஸ்ரீராமுலு கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

பேரணியில் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி, மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். புஸ்ஸி வீதி வழியாக சென்ற பேரணி கடற்கரை காந்தி சிலை திடலில் நிறைவடைந்தது.

பேரணியில், புகையிலையால் ஏற்படும் தீமைகள், நோய்கள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்றனா். முடிவில், புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். இதில், புதுவை மாநிலப் புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT