புதுவையிலுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சி சாா்பில் மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டனா்.
காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநிலத் தலைவராக வெ.வைத்திலிங்கம் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சியின் மேற்பாா்வையாளா்களை நியமித்துள்ளாா். அதனடிப்படையில், முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாநில நிா்வாகிகள் மேற்பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேற்பாா்வையாளா் தலைமையில் வட்டார அளவில் கட்சிக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், மக்கள் பிரச்னை தொடா்பான போராட்டங்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தை வருகிற 25-ஆம் தேதிக்குள் நடத்தி அதன் விவரத்தை கட்சிக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.