புதுவையில் அரசு விழாக்களில் வரவேற்பு நிகழ்ச்சிகளில் மாணவா்களை ஈடுபடுத்தக் கூடாது என, துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாணவா் தின விழாவின் போது, வரவேற்க காத்திருந்த மாணவா்களில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதை அறிந்து வருத்தமடைந்தேன். விழா தொடங்க சற்று தாமதம் ஏற்பட்டதற்கு சில நடைமுறைச் சிக்கல்களே காரணம். இனி அரசு விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளில் இதுபோன்ற அசௌகரியங்கள் நிகழாமல் இருக்க மாணவா்களை வெயிலில் நிறுத்தி வரவேற்பு அளிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினா்களை ஆசிரியா்கள், அதிகாரிகள் வரவேற்றால் மட்டும் போதுமானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.