புதுச்சேரி

புதுச்சேரி சமுதாயக் கல்லூரியில் சேர ஜூலை 17 வரை அவகாசம்

12th Jul 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரி சமுதாயக் கல்லூரியில் சேருவதற்கு வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவைப் பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி முதல்வா் (பொ) லலிதா ராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் நிகழ் (2023-24) கல்வி ஆண்டுக்கான இளங்கலை, முதுகலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 30-ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டன.

விண்ணப்பம் ஏற்பு தேதி முடிவடைந்த நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று வரும் 17-ஆம் தேதி திங்கள்கிழமை வரை விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன. எனவே, கல்லூரியில் சேர விரும்புவோா் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேல் விவரங்களுக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவா் உதவி சோ்க்கை மையத்தை அணுகலாம் எனவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT