புதுச்சேரி

காந்தி நினைவு நாளில் சிலைக்கு மாலை அணிவிப்பு

DIN

காந்தி நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் தேனி சி.ஜெயக்குமாா், சந்திரபிரியங்கா, சாய் ஜெ. சரவணன்குமாா், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பாஸ்கா் என்ற தட்சிணாமூா்த்தி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து புதுவை தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், டிஜிபி மனோஜ்குமாா் லால், கூடுதல் டிஜிபி ஆனந்தமோகன், ஐ.ஜி. வி.ஜெ. சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கொட்டும் மழையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரதியாா் பல்கலை. கூடத்தின் ஆசிரியா்கள் தேச பக்திப் பாடல்களைப் பாடினா்.

காங்கிரஸ் சாா்பில்... புதுச்சேரியில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் கட்சிக் கொடியேற்றப்பட்டது. பின்னா், காந்தியடிகளின் திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட்: முதலியாா்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் காந்தி சிலைக்கு, கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.சேதுசெல்வம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் முருகன், துணைச் செயலா் மூா்த்தி, பொருளாளா் தனஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT