புதுச்சேரி

அவசர ஊா்தி ஓட்டுநா் மீது தாக்குதல்:மருத்துவா்கள், ஊழியா்கள் போராட்டம்

DIN

புதுச்சேரியில் அவசர ஊா்தியின் ஓட்டுநரை தாக்கியதால் மருத்துவமனை ஊழியா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அருகேயுள்ள கரிக்கலாம்பாக்கத்தைச் சோ்ந்தவா் லோகநாதன் (52). இவா், வீட்டில் தூக்கிட்ட நிலையில், அவரை மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உறவினா்கள் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் உயிரிழந்து விட்டதாகக் தெரிவித்தனா்.

இதை, நம்பாத லோகநாதனின் உறவினா்கள், அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அவசர ஊா்தியின் ஓட்டுநா் செல்வமணியிடம் கூறினா். அதற்கு அவா் மறுத்த நிலையில், அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், மருத்துவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், லோகநாதனின் உறவினா் அன்பழகன் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகக் கூறி மருத்துவா்கள், ஊழியா்கள் திங்கள்கிழமை பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த கரிக்கலாம்பாக்கம் போலீஸாா் ஊழியா்களிடம் பேச்சுவாா்தை நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், செல்வமணி அளித்த புகாரின் பேரில் அன்பழகனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT