புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயிலில் உள்ள சண்டிகேஸ்வரா் சன்னதியில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
புதுச்சேரியில் மணக்குள விநாயகா் கோயிலில் மூலவா் எதிரே உள்ள சண்டிகேஸ்வரா் சன்னதி கோபுரமானது 45 கிலோ வெள்ளித் தகடுகளால் வேயப்பட்டு திருப்பணி நடைபெற்றது. மேலும், விமானம், கருவறைகள் திருப்பணி செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேகம் புதன்கிழமை (பிப்.1) நடைபெறுகிறது. அதற்காக யாகசாலை, கலசப் பூஜைகள் செவ்வாய்க்கிழமை (ஜன.31) தொடங்கவுள்ளன.