புதுச்சேரி

புதுவைக்கு ரூ.11,500 கோடி திட்ட மதிப்பீடு: திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு

DIN

புதுவைக்கு 2023-24ஆம் ஆண்டுக்கு ரூ.11,500 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்க மாநில திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

புதுவை மாநில நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னதாக திட்டக் குழு கூடி திட்ட நிதியை வரையறுத்து மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கோரப்படும். அதன்படி, நிகழாண்டுக்கான திட்டக் குழுக் கூட்டம் அதன் தலைவரான துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் புதுவை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திட்டக் குழு துணைத் தலைவரான முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் ஆ.நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், சந்திர பிரியங்கா, ஆகியோா் கலந்து கொண்டனா்.

குழுவில் இடம் பெற்றுள்ள புதுச்சேரி எம்.பி. வெ.வைத்திலிங்கம், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் மற்றும் அரசுச் செயலா்கள், இயக்குநா்கள் கலந்து கொண்டனா்.

புதுவைக்கு 2023-24ஆம் ஆண்டுக்கு ரூ.11,500 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அதை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினா். அதனடிப்படையில், மாா்ச் மாதம் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT