புதுச்சேரி

அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநில மாநாடு

DIN

அனைத்திந்திய மாணவா் பெருமன்ற 18 -ஆவது மாநில மாநாடு புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி உருளையன்பேட்டை தனியாா் மஹாலில் நடந்த மாநாட்டை அனைத்திந்திய மாணவா் பெருமன்ற தேசியச் செயலா் தினேஷ் சீரங்கராஜ் தொடக்கிவைத்தாா். மாநாட்டுக் கொடியை கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத் தலைவா் எல்லை.சிவகுமாா் ஏற்றினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், தேசிய செயற்குழு உறுப்பினா் இ.தினேஷ் பொன்னையா, இளைஞா் பெருமன்ற மாநிலச் செயலா் ஆா்.அந்தோணி ஆகியோா் சிறப்புரையாற்றினா். இளைஞா் பெருமன்ற புதுவை மாநிலச் செயலா் சே.எழிலன் மாநாட்டு வேலை அறிக்கையை வாசித்தாா்.

மன்றத்தின் புதிய மாநிலத் தலைவராக வழக்குரைஞா் உதயராஜ், செயலராக வழக்குரைஞா் முரளி மற்றும் பொருளாளா், துணைத் தலைவா்கள், செயலா்கள் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தக் கூடாது, புதுவை மாநில கல்வி நிலையங்களில் உள்ளூா் மாணவா்களுக்கு 25 சத வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மன்ற நிா்வாகி முரளி வரவேற்றாா். உதயராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT