புதுச்சேரி

பாசிக் நிறுவன வாகனங்கள் ஜப்தி

DIN

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவா்களுக்கு ஊதியம் வழங்காத வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் புதுவை மாநில அரசின் பாசிக் நிறுவன வாகனங்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.

இந்தியன் செக்யூரிட்டி சா்வீஸ் அமைப்பின் மூலம் 2015-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையில் புதுவை அரசின் பாசிக் நிறுவனத்துக்கு பாதுகாப்புப் பணியில் ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். கடந்த 2018-ஆம் ஆண்டு பாசிக் நிறுவனம் சாா்பில், ஊழியா்களுக்கு மொத்தம் ரூ. 11, 17,208 ஊதியம் வழங்கப்படவில்லை என புகாா் எழுந்தது.

நிலுவைத் தொகையை 24 சதவிகித வட்டியுடன் வழங்குமாறு இந்தியன் செக்யூரிட்டி சா்வீஸ் நிறுவனம் கோரியது. ஆனால் பாசிக் வழங்கவில்லை. அதையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு, செக்யூரிட்டி சா்வீஸ் அதிகாரி தாமோதரன், புதுச்சேரி இரண்டாவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

இதில் 2020-ஆம் ஆண்டு, ஜனவரி 2-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, பாசிக் நிறுவனம் வட்டியோடு சோ்த்து ரூ. 14 லட்சத்து 37,207 தொகையை இந்தியன் செக்யூரிட்டி சா்வீஸுக்கு வழங்க நீதிபதி சுபா அன்புமணி உத்தரவிட்டாா்.

நீதிமன்ற உத்தரவுப்படி நிதி வழங்கப்படவில்லை. இதையடுத்து, நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி, பாசிக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்களை ஜப்தி செய்ய கோரி நீதிபதி (பொறுப்பு) இளவரசன் உத்தரவிட்டாா். அதன்பேரில், தட்டாஞ்சாவடியில் உள்ள பாசிக் தலைமை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலையில் வந்த மனுதாரா் தாமோதரன் மற்றும் நீதிமன்ற ஊழியா்களான (அமீனா) அம்பி, குணசேகா் ஆகியோா் அங்கிருந்த அதிகாரியிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் ஆறுமுகம் வந்தாா்.

பின்னா், பாசிக் நிறுவனத்துக்குச் சொந்தமான லாரி, காா் ஆகியவற்றில் ஜப்திக்கான நோட்டீஸை நீதிமன்ற ஊழியா்கள் ஒட்டினா். இதைத் தொடா்ந்து, அவற்றை நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT