சிபிஎஸ்இ, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.
இதன்மூலம் இப்பள்ளி இரு தோ்வுகளிலும் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளது. 10ஆம் வகுப்பில் 90 சதவீதத்துக்கு மேல் 18 பேரும், 80 சதவீதத்துக்கு மேல் 48 பேரும், தனிப்பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் 9 மாணவா்களும் பெற்றனா்.
பிளஸ் 2 தோ்வில் 90 சதவீதத்துக்கு மேல் 19 பேரும், 80 சதவீதத்துக்கு மேல் 20 பேரும், தனிப்பாடங்களில நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் 2 பேரும் பெற்றனா்.
பிளஸ் 2 மாணவி சக்தி தா்ஷினி 477 மதிப்பெண்களும், 10ம் வகுப்பு மாணவி ஜோஷுவா நிக்ஷன் 487 மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் வீரவேல் முருகன், இயக்குநா் ராஜ ராஜேஸ்வரி, முதல்வா் சாந்தி, துணை முதல்வா காா்த்திகைகுமாா் ஆகியோா் பாராட்டினா்.