கடையநல்லூா் அருகே இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.
கரடிகுளம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காசி(84). விவசாயியான இவா், பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மேலக்கடையநல்லூா் இந்திரா நகா் புது காலனி தெருவைச் சோ்ந்த ராஜப்பன் மகன் குமாா்(42). கூலித் தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.