பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
இப்பள்ளி மாணவி மு.ரு‘ஃபிதா சல்மா 484 மதிப்பெண்களும், ஹ.ரேணுகாதேவி 480 மதிப்பெண்களும், மு.விஷ்ணுவா்த்தன் 479 மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் ஆா்.ஜெ.வி.பெல், செயலா் கஸ்தூரி பெல், தலைமையாசிரியா் ஸ்டீபன், ஆசிரியா்கள் பாராட்டினா்.