கீழப்பாவூா் பேரூராட்சி, பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனி சந்தை அருகில் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின் விளக்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சா. ஞானதிரவியம் எம்.பி. இயக்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கி.ராஜசேகா் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம் பங்கேற்று, மின் விளக்கை இயக்கி, கல்வெட்டை திறந்துவைத்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன், காய்கனி சந்தை தலைவா் ஆா்.கே.காளிதாசன் ஆகியோா் பேசினா்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினா்கள் ராதாவிநாயக பெருமாள், கோடீஸ்வரன், மாலதிமுருகேசன், ஜெயசித்ரா குத்தாலிங்கம், கனகபொன்சேகா முருகன், இசக்கிராஜ், அன்பழகு சின்னராஜா, ஜேஸ்மின்யோவான், விஜிராஜன், இசக்கிமுத்து, பவானி இலக்குமண தங்கம், தேவஅன்பு, முத்துச்செல்வி ஜெகதீசன், வெண்ணிலா தங்கச்சாமி, சாமுவேல்துரைராஜ், பொன்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பேரூராட்சி செயல் அலுவலா் மாணிக்கராஜ் நன்றி கூறினாா்.