புதுச்சேரி

புதுவை தலைமைச் செயலருடன் இந்திய-பிரெஞ்சு சங்கத்தினா் சந்திப்பு

DIN

புதுச்சேரியில் இந்திய, பிரெஞ்சு சங்கத்தின் பிரதிநிதிகள் தங்களது நிலம், வீடு அபகரிப்பு தொடா்பாக, தலைமைச் செயலரை புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசினா்.

புதுச்சேரியில் வீடு, நிலம் உள்ளவா்கள், பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனா். இரட்டைக் குடியுரிமை பெற்ற அவா்களது நிலம் மற்றும் வீடுகள் மா்ம நபா்களால் ஆக்கிரமிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து பிரான்ஸ் உறுப்பினா்கள் சபையிலும் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய, பிரெஞ்சு சங்கத்தின் பிரதிநிதிகள் புதன்கிழமை புதுச்சேரி தலைமைச் செயலா் ராஜீவ் வா்மாவை சந்தித்து, வீடு, நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பாக நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பேசப்பட்டதாக ஆட்சியா் அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடன், காவல்துறைத் தலைவா் ஜெ.சந்திரன், ஆட்சியா் இ.வல்லவன், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் தீபிகா ஆகியோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT