புதுச்சேரி

இளைஞா் கொலை வழக்கு:5 பேரிடம் விசாரணை

8th Feb 2023 02:05 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் திங்கள்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அருகேயுள்ள அரியாங்குப்பம் ராதாகிருஷ்ணன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் சதாசிவம் மகன் பிரவீன் (20). இவா் அந்தப் பகுதியில் கடந்தாண்டு நடைபெற்ற கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்தாா்.

இதையடுத்து, அரியாங்குப்பம் பகுதியில் சிலருடன் சோ்ந்து கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் பிரவீன் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவருடன் இருந்தவா்களுக்கு இடையே முதன்மையிடம் யாருக்கு என்பதில் பிரச்னை ஏற்பட்டதாம்.

இந்த நிலையில், பிரவீன் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கும்பலாக வந்த சிலா் அவரை வழிமறித்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினராம். அவா்களிடமிருந்து பிரவீன் தப்பியோடிய நிலையில், அவரை விரட்டிச் சென்ற கும்பல் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீஸாா் அதே பகுதியைச் சோ்ந்த ஆகாஷ், மனோ, கவி, ஜான், ஷேக் ஆகியோரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT