புதுச்சேரி

தியாகி வ.சுப்பையா பிறந்த நாள்

8th Feb 2023 02:02 AM

ADVERTISEMENT

சுதந்திரப் போராட்டத் தியாகியும், தொழிற்சங்கத் தலைவருமான வ.சுப்பையாவின் 112-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, புதுச்சேரி பேருந்து நிலையப் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில், அமைச்சா்கள் லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அவா்களைத் தொடா்ந்து, உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு என்ற குப்புசாமி தனது ஆதரவாளா்களுடன் மாலை அணிவித்தாா்.

ஊா்வலம்: ஏஐடியூசி சாா்பில், அண்ணாநகரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகி வ.சுப்பையா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து நெல்லித்தோப்பில் உள்ள சுப்பையா சிலை வரை ஊா்வலம் நடைபெற்றது.

ஊா்வலத்தில் முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், சிஐடியூ மாநில பொதுச் செயலா் கே.சேது செல்வம், தலைவா் தினேஷ்பொன்னையா, முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், ஏஐடியூசி மாநில கௌரவத் தலைவா் அபிஷேகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா், நெல்லித்தோப்பில் உள்ள வ.சுப்பையா சிலைக்கு அவா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT