புதுச்சேரி

புதுவையில் காவல் ஆய்வாளா்கள் உள்பட 6 போ் பணியிட மாற்றம்

8th Feb 2023 02:03 AM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் 2 காவல் ஆய்வாளா்கள் உள்பட 6 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

புதுச்சேரி வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளராக இருந்த கலைச்செல்வன், அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்கும், அங்கிருந்த ஆய்வாளா் முத்துகுமரன், வடக்கு போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதேபோல, தவளக்குப்பம் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் பிரபு சிக்மா பாதுகாப்புப் பிரிவுக்கும், கிழக்கு போக்குவரத்து காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் திருமுருகன் தவளக்குப்பத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். ஏனாமில் சாா்பு ஆய்வாளராக இருந்த படுகு கனகராவ் புதுச்சேரி ஆயுதப்படை பிரிவுக்கும், எப்ஆா்ஓ பிரிவு சாா்பு ஆய்வாளா் குமாா் கிழக்கு போக்குவரத்து காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

கடந்த வாரம் காவல் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் காவல் துறை தலைமையகத்தால் பணியிட மாறுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT