புதுச்சேரி

பெத்திசெமினோ் பள்ளி ஆண்டு விழா: ஆளுநா் உள்ளிட்டோா் பங்கேற்பு

8th Feb 2023 02:04 AM

ADVERTISEMENT

புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள பெத்தி செமினோ் மேல்நிலைப் பள்ளியின் 175-ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை தொடங்கியது.

விழாவின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா் ஆா்.பாஸ்கல்ராஜ் வரவேற்றாா். இதில், புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில், பாரம்பரியமிக்க இந்தப் பள்ளியின் கல்விச் சேவை பாராட்டுக்குரியது என்றாா்.

விழாவில், பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், புதுச்சேரி - கடலூா் மறைமாவட்டப் பேராயா் பிரான்சிஸ்ட் கலிஸ்ட், தமிழ்நாடு தொழில்நுட்பப் பிரிவு உயா் அதிகாரி ராபா்ட்ஜெரால்டு ரவி, உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால்கென்னடி, பள்ளி துணை முதல்வா் ஜீவா எட்வா்டு எடிசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். புதன்கிழமை (பிப்.8) ஆண்டு விழா நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT